"உடனே கட்டுங்க.. இல்லனா அபராதம் ஏறிட்டே இருக்கும்" - மக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Update: 2024-05-02 05:34 GMT

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி கடந்த ஏப்.1 முதல் 30-ம்தேதி வரை 382 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 கோடி ரூபாய் அதிகம் எனக் கூறப்படுகிறது. கடந்த 30 நாட்களில் 5 லட்சத்து 22 ஆயிரம் பேர் காலத்தோடு சொத்து வரியைச் செலுத்தி 5 சதவீத தள்ளுபடியைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சொத்துவரி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு அரையாண்டுக்குப் பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு ஒவ்வொரு மாதத்துக்கும்ஒரு சதவீதம் தனிவட்டி அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்