சென்னையில், 2 நாட்களில் 2 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு சென்னை ராஜா எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அந்தந்த பள்ளிகளில் போலீசார் சோதனை செய்தபோது, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.