ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகைக்காக இன்று முதல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி துவங்கியுள்ளது... ரேஷன் அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்தால் தகுதியானவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஐந்தரை லட்சம் பேர் விண்ணப்பித்தனர்... விண்ணப்பம் அளித்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்... இதையடுத்து தகுதியானவர்களுக்கு நிவாரண தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி துவங்கியுள்ளது