10 நாட்கள் எலி கிடந்த எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்ட மொத்த குடும்பம் - சென்னையில் பேரதிர்ச்சி

Update: 2024-06-18 08:12 GMT

10 நாட்கள் எலி கிடந்த எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்ட மொத்த குடும்பம் - சென்னையில் பேரதிர்ச்சி சம்பவம்

சென்னையில், எண்ணெய் கேனில் எலி இறந்து கிடந்ததை கவனிக்காமல் சமையல் செய்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த மூதாட்டி சின்னக்குழந்தை தனது பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியூர் சென்றனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களாக வீட்டில் இருந்த சமையல் எண்ணெயில் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். குழந்தைக்கு உணவு ஊட்டியபோது வாந்தி எடுத்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வீட்டில் இருந்த எண்ணெயை எடுத்து பார்த்தபோது சிவப்பு நிறத்தில் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். எண்ணெயை கீழே கொட்டி பார்த்தபோது அதில் எலி உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டி சின்னக்குழந்தை உட்பட குடும்பத்தினர் 8 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதில் 4 பேர் வீடு திரும்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்