திடீரென சென்னையை புரட்டி போட்ட மழை.. உடனே களத்தில் இறங்கிய மாநகராட்சி ஊழியர்கள்
சென்னையில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கோயம்பேடு, அண்ணாநகர், கிண்டி, மயிலாப்பூர், அம்பத்தூர், பட்டரவாக்கம், சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, பெரம்பூர், எழும்பூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ராயப்பேட்டை, டாக்டர் பெசன்ட் சாலை, வியாசர்பாடி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கி நின்ற நீரில், வாகனங்கள் பழுதாகி நின்றன. இதனைத் தொடர்ந்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.