தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பதிவு மூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பதாகைகளை ஏந்தி அரசுக்கு வலியுறுத்தும் வகையில் கோஷமிட்டனர். தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.