காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-08-27 12:20 GMT

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர் பணிகளுக்கான உடல் தகுதி தேர்வு சென்னை, திண்டுக்கல் ஆகிய இரண்டு இடங்களில் இன்று நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் தேர்வில் 656 ஆண்கள் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு சரிபார்ப்பு , 1500 மீட்டர் ஓட்ட பந்தயம் நடைபெறுகிறது. நாளை 509 பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்