சென்னையை உலுக்கிய போலீசின் 12 பக்க லெட்டர்

Update: 2024-06-18 15:58 GMT

சென்னை டிஜிபி அலுவலகத்தில் உளவுத்துறை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜான் ஆல்பர்ட். இவர், கடந்த 17ம் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலைக்கு முன் ஜான் ஆல்பர்ட் எழுதிய 12 பக்கங்கள் கொண்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். திருமணமான நாள் முதல் தற்போது வரை, தான் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வருவதாக கூறி தன்னை காயப்படுத்தி வந்த மனைவி, தன் பெற்றோரை ஆபாசமாக பேசி திட்டி தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருக்கிறார் ஜான் ஆல்பர்ட். தந்தையர் தினத்தின் போது, மகளை முத்தமிடச் சென்ற தன்னிடம் இருந்து குழந்தையை மனைவி பறித்துச் சென்றது மிகவும் காயப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், மகளைப் பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை எனக் கூறி தற்கொலை செய்திருப்பது மனதை ரணமாக்கி இருக்கிறது. மேலும் தன்னையும், தன் பெற்றோரையும் மனைவி ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் செல்போனில் இருப்பதாகவும், செல்போன் பாஸ்வேர்டு நண்பர் ஒருவரிடம் இருப்பதாகவும் கூறி அவர் பெயரையும் ஜான் ஆல்பர்ட் குறிப்பிட்டிருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்