வீட்டில் இறந்து கிடந்த மனைவி.. உடற்கூறாய்வில் அம்பலமான கணவனின் நாடகம்..தி.மலை அருகே அதிர்ச்சி

Update: 2024-12-20 13:16 GMT

செய்யாறு அருகே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவியை தாக்கிய நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் வெள்ளாகுளம் கிராமத்தை சேர்ந்தவர்கள், பெருமாள் உமாராணி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் காயங்களுடன் இருந்த கிடந்த உமாராணியை, கணவர் பெருமாள் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த போது, உமாராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உமாராணியின் தாயார் பவுனம்மாள் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெருமாளுடன் ஏற்பட்ட வாய் தகராறில், உமாராணி தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. உமாராணியின் உடல் உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெருமாளை போலீசார் கைது செய்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்