ரூ.38 லட்சம் வாடகை பாக்கி - அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-12-20 14:02 GMT

 தென்காசியில் கடை வாடகை பாக்கியை வசூல் செய்ய வந்த அதிகாரிகள் முன்பு பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தன்னை எரிக்குமாறு கூறிய ஜவுளி கடை உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் வாளகத்தில் ஜவுளி கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த கடை கட்டிடங்களை இந்து அறநிலையத்துறையினர் வாடகைக்கு விட்டுள்ளனர். இதில், 50 வயதான சுப்பிரமணியன் என்பவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். கடந்த 2019 முதல் 2022 வரை கடை வாடகை செலுத்தாத நிலையில், 38 லட்சம் ரூபாய் வரை பாக்கி இருந்துள்ளது. இந்த நிலையில் வாடகை பாக்கி வசூலிக்க சென்ற இந்து அறிநிலையத்துறை அதிகாரிகள் முன்னால் சுப்பிரமணியன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தன்னை தீ வைத்து எரிக்கும்படி அவர்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் சுப்பிரமணியன் தன் முடிவை கைவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்