``கடலுக்குள் இறந்த 2 மகன்கள்?.. பாம்பேயில் உயிருடன் இருக்கிறார்கள்'' - அதிர்ச்சியை கிளப்பிய தாய்

Update: 2024-12-20 12:55 GMT

ஓராண்டாக மாயமான மகன்களை மீட்டுத்தரக்கோரி தாய் ஒருவர் குமரி ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது... குமரி குளச்சல் அருகே கோடிமுனையில் மாற்றுத்திறனாளி ராஜா தனது மனைவி ராஜம் மற்றும் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர்களது 16 மற்றும் 9 வயது மகன்கள் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி முதல் மாயமான நிலையில் போலீசார் தேடி வந்தனர்... ராஜம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எனினும் மகன்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தனது அக்கா மகன் மும்பையில் தங்கியுள்ள நிலையில் அவர் தனது இரு மகன்களையும் தனது பாதுகாப்பில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆட்சியர் அலுவலக வாயிலில் ராஜம் தன்னந்தனியாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்