11 மணி நேரமா..? - பெருங்களத்தூரில் எறும்பு போல் ஊரும் வாகனங்கள்

Update: 2024-11-04 01:39 GMT

11 மணி நேரமா..? - பெருங்களத்தூரில் எறும்பு போல் ஊரும் வாகனங்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை திரும்பும் பொது மக்களால் பெருங்களத்தூரில் 5 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயங்க உள்ள காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் வாகனங்கள் மூலம் சென்னை திரும்பினர்.

இதனால், மதுராந்தகம், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் குரோம்பேட்டை வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது. ஒவ்வொரு காரிலும் நான்கு இருக்கைகள் மட்டுமே இருக்கும் நிலையில், அதில் 7, 8 பேர் என நெருக்கமாக பயணித்தனர்.

அதிக வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கவில்லை என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மதுரையில் காலை 7 மணிக்கு புறப்பட்டு 11 மணி நேரமாக பயணித்தும் சென்னைக்கு சென்று சேர முடியவில்லை என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். குறிப்பாக விக்கிரவாண்டி முதல் பரனூர் டோல்கேட் வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்