பெட்ரோல் நிலையத்தில் கேஸ் லீக் - புகை மண்டலமாக மாறியதால் பரபரப்பு

Update: 2024-10-30 03:09 GMT

பெட்ரோல் நிலையத்தில் கேஸ் லீக் - புகை மண்டலமாக மாறியதால் பரபரப்பு

சென்னை கே.கே.நகர் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் உள்ள சிஎன்ஜி கேஸ் நிரம்பும் நிலையத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டு, புகை மண்டலமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கேஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்து வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். பம்பில் இருந்த 400 கிலோ சிஎன்ஜி கேஸ் வெளியேறி புகை மண்டலமாக காட்சியளித்ததால் பரபரப்பு நிலவியது. விபத்தின் போது, சி.என்.ஜி கேஸ் பம்பில் வேலை பார்த்து வந்த சிவா என்ற ஊழியர், உள்ளே சிக்கிசியிருக்கலாம் என்று ஊழியர்கள் தேடிய நிலையில், அவர் தப்பித்த‌து தெரிய வந்த‌து. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வாயுக் கசிவை சரி செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்