லாட்ஜில் நேபாள சிறுவனுடன் சென்னை சிறுமி.. போலீசாரை அதிரவிட்ட கண்ட காட்சி
பள்ளிக்கு சென்ற தனது 13 வயது பேத்தி, வீடு திரும்பவில்லை எனக்கூறி சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் மூதாட்டி ஒருவர் புகாரளித்துள்ளார். இந்நிலையில், சிறுமி பயிலும் பள்ளியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிறுவன் ஒருவருடன் சிறுமி பேசிக் கொண்டிருந்ததும், பின்னர் இருவரும் திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதிக்கு சென்று தங்கியதும் தெரியவந்தது. இந்நிலையில், திருவான்மியூரில் உள்ள விடுதிக்கு சென்ற போலீசார், இருவரையும் மீட்டிருக்கின்றனர். விசாரணையில், குடும்ப சூழ்நிலையால் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பார்ட் டைமாக பணிபுரிந்து வந்த சிறுமி, பக்கத்து விடுதியில் பணிபுரிந்து வந்த நேபாள நாட்டு சிறுவனை காதலித்து வந்தது தெரியவந்திருக்கிறது. இதனிடையே, செல்போன் உபயோகிக்க கூடாது, வெளியில் செல்ல கூடாது என சிறுமியின் பாட்டி கட்டுப்பாடுடன் இருந்ததால், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியது அம்பலமானது. இருவருக்கு பண உதவி செய்து உதவிய சிறுவனுடன் பணிபுரிந்தவரை இந்த விவகாரத்தில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.