சென்னை மெட்ரோ பணியால் ஏற்பட்ட டேமேஜ்.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

Update: 2024-08-29 13:08 GMT

சென்னையில், மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவனம், கியாஸ் பைப் லைனை சேதப்படுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் செயல்படும் தனியார் நிறுவனம், கடந்த ஓராண்டுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்று, இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்காக, சுமார் 5 அடி ஆழத்தில் பைப் லைனை நிறுவியது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி, மெட்ரோ ரயில் நிறுவன ஒப்பந்த நிறுவனம், சென்னை வடபழனி சந்திப்பு அருகில், மெட்ரோ ரயில் பில்லர் வைப்பதற்காக ஃபைலிங் வேலையில் ஈடுபட்டது. அப்போது தனியார் நிறுவனத்தால் புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்புகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் நிறுவனம் முறையிட்டபோது உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்நிறுவனம் சார்பில் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்