பெண்களுக்கான தொழிற்பயிற்சி கருத்தரங்கம்-நேச்சுரலே நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் பங்கேற்பு

Update: 2024-09-03 12:44 GMT

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் பெண்களுக்கான தொழில் பயிற்சி கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பெண்கள் உருவாக்கிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது. அவர்கள் தொழில் தொடங்க கடன் உதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறந்த தொழில் முனைவோர், புதிதாக தொழில் தொடங்கியவர்கள் மற்றும் சிறந்த சமூகசேவை செய்யும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் உரையாற்றிய நேச்சுரலே நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன், மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையெல்லாம் வேண்டாம், நாம் செய்யும் செயலின் முடிவும் முக்கியமல்ல, இப்போது நாம் எத்தனை உயிர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தோம் என்பதே வெற்றி என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்