பொக்லைன் முன் நின்று பரபரப்பை கிளப்பிய பெண்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்

Update: 2024-09-07 03:18 GMT

சென்னை திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன், வீட்டு உரிமையாளர் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக சத்தியமூர்த்தி நகர் 1-வது தெருவில் வசித்து வரும் பூங்காவனம் என்பவர், வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் தடுத்ததையும் மீறி, பெண் ஒருவர் பொக்லைன் எந்திரம் முன் நின்று ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்து நிறுத்தினார். வீட்டில் வசித்தவர்கள் ஒரு வாரம் அவகாசம் கோரியதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்