காதலியுடன் மது அருந்திய காதலன்.. எல்லை மீறிய இளைஞர்கள்... எச்சரித்த பெண்... கழுத்தறுத்துக் கொன்ற கொடூர நண்பர்கள்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
நண்பர்களோடு வீட்டில் மது அருந்தியதை பெற்றோரிடம் தெரிவித்ததால், பக்கத்து வீட்டுப்பெண்ணை இளைஞர் கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவான்மியூர் ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் அருள் மணி. இவர், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, தன்னுடைய காதலி மற்றும் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்ததாக தெரிகிறது. இதில், வீட்டிற்குள் வைத்து மது அருந்திய அனைவரும் சில அநாகரிக செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்கார பெண் பொன்னி என்பவர், சம்பவ முழுவதையும் அருள் மணியின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதில், அருள் மணியை அவரது பெற்றோர் கண்டித்த நிலையில், ஆத்திரத்தில் இருந்த அருள் மணி, தன் நண்பர்களுடன் சேர்ந்து பொன்னியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அருள்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.