கடை மூடும் நேரத்தில் பரோட்டா கேட்டு மாஸ்டரை கரண்டியால் அடித்த 2 பேர் - கோடம்பாக்கத்தில் பகீர்

Update: 2024-07-02 03:48 GMT

சென்னையில் ஓட்டலுக்கு சென்ற 2 பேர் பரோட்டா கேட்டு மாஸ்டரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோடம்பாக்கம் புலியூர்புரம் சாலையில் உள்ள ஹோட்டலில் நள்ளிரவு கடையை மூடும் நேரத்தில் கடைக்கு வந்த இரண்டு பேர் பரோட்டா கேட்டு வடமாநில மாஸ்டரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கடை மூடப் போவதாக மாஸ்டர் கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தோசை கரண்டி எடுத்து மாஸ்டர் பாபியை தலையில் அடித்து விட்டு தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்