தலைமை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

Update: 2024-08-06 15:20 GMT

தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? என அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துறை ரீதியான விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காமல், ஐந்து ஆண்டுகளாக பொன்.பாண்டியனை பணியிடை நீக்கத்தில் வைத்துள்ளதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகளாக எந்த வேலையும் வாங்காமல், எதிர் மனுதாரருக்கு 75 சதவீத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த தொகையை குறித்த காலத்தில் விசாரணையை முடிக்காத அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்