வேலையே காட்டிய கூகுள் மேப்... கத்திப்பாரா சப்-வேயில் சிக்கிய டேங்கர் லாரி... பரபரப்பு காட்சி
சென்னை கிண்டி கத்திப்பாரா சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்ட சிமெண்ட் கலவை டேங்கர் லாரியை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் மீட்டனர். லாரி ஓட்டுநர் மான்சிங், ஆந்திரா செல்வதற்கு வழி தெரியாமல் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளார். அண்ணா சாலையை அடைய கத்திப்பாரா சுரங்கப்பாதை வழியாக சென்ற போது, உயரத்தை கணக்கில் கொள்ளாமல் ஓட்டியதில் லாரி சுரங்கப்பாதையில் சிக்கியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்டனர்.