மீன் அங்காடி வளாகத்தில் திடீர் ஆய்வு... பரபரக்கும் சென்னை பட்டினப்பாக்கம்

Update: 2024-10-19 08:20 GMT

மீன் அங்காடி வளாகத்தில் திடீர் ஆய்வு... பரபரக்கும் சென்னை பட்டினப்பாக்கம்


சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீன் அங்காடி வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் விளக்கமளித்தார்.

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டு, அந்த சாலையிலேயே நீதிமன்ற உத்தரவுப்படி, 14 கோடி ரூபாய் செலவில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மீன் வியாபாரிகள் அங்கு செல்லாமல் இருந்ததால், கடந்த 7-ஆம் தேதி லூப் சாலையில் இருந்த மீன் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. கடந்த சில நாட்களாக புதிய நவீன மீன் அங்காடி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஒரு சிலர் மீண்டும் சாலையிலேயே மீன்களை வைத்து வியாபாராம் செய்தனர். 19-ஆம் தேதி முதல் (நாளை) லூப் சாலையில் மீன் வியாபாரிகள் கடை வைக்க கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ள நிலையில், நவீன மீன் அங்காடி வளாகத்தில் மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கடைகளின் இடவசதியை மாற்றியமைக்க வேண்டும் என்றும், விடுபட்டவர்களுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும் என்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கைகளை பரீசிலித்து நடவடிக்கை எடுப்பதாக மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்