ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞர்.. சென்னையை நடுங்க வைத்த மர்ம கொலை | Thanthitv

Update: 2024-03-23 06:41 GMT

சென்னையை அடுத்த எண்ணூரில், தலை, கழுத்து பகுதிகளில் வெட்டுக்காயங்களோடு இறந்து கிடந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. தாழங்குப்பம் கடற்கரை ஒட்டிய பகுதியில், இளைஞர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த இளைஞர் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த பவுல் ராஜ் என தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்