ஸ்தம்பித்த சென்னை.. மக்கள் வெள்ளத்தில் பேருந்துகள்

Update: 2024-08-05 14:42 GMT

மின்சார ரயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் வருகிற 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தாம்பரம் செல்லும் புறநகர் ரயில் சேவை பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், கூட்டத்தை குறைக்க பல்லாவரம், குரோம்பேட்டை பேருந்து நிலையங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்