தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்.. இரு கால்களும் வெட்டப்பட்டு பிறந்த குழந்தை - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-05-01 04:42 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா. சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் இவர், உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவரை காதலித்து வந்த நிலையில் கர்ப்பம் தரித்திருக்கிறார். இதில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வினிஷா, திடீரென ஏற்பட்ட தீராத வயிற்று வலியால் தான் தங்கியிருந்த விடுதி அறையில் வைத்தே தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தின் போது, இரு கால்களும் வெட்டப்பட்ட நிலையில், குழந்தை இறந்து பிறந்த சம்பவமும் பேரதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வினிஷா சென்றதை அடுத்து, இறந்த குழந்தையை பத்திரப்படுத்திய மருத்துவர்கள், வினிஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தி.நகர் போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்