மதுபோதையில் மூவரை கத்தியால் வெட்டிய நபர் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-06-18 16:24 GMT

கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகரை சேர்ந்தவர் முத்து வழிவிட்டான். இவர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹரிபிரசாத் என்ற 19 வயது இளைஞரையும், அவரது தாய் தனலட்சுமியையும் கடந்த இரண்டு மாதங்களாகவே மதுபோதையில் அச்சுறுத்தி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் தாய் மற்றும் மகனை கத்தியால் வெட்டிய முத்து வழிவிட்டான் தடுக்க வந்த ரேணுகா என்ற பெண்ணையும் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், முத்து வழிவிட்டானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்