தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த அரக்கி.. சென்னையில் அதிரவிட்ட கொடூர சம்பவம் | Chennai

Update: 2024-07-21 05:33 GMT

சென்னையில் உள்ள, அரும்பாக்கத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர், தன்னை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்முறை செய்வதாக செல்போன் மூலமாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அப்பெண்ணை மீட்டனர். பின்னர் இதற்கு காரணமாக சதீஷ்குமார், ஷகிலா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், மீட்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த 19 வயது இளம்பெண், கோவையில் உள்ள தன் பெற்றோரை சந்தித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தோழியின் அறையில் தங்கி வேலை தேடி வந்த அப்பெண்ணிடம், சதீஷ் என்பவர் பேச்சு கொடுத்தார். பின்னர் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று, அரும்பாக்கத்தில் உள்ள தனது தோழி வீட்டில் அடைத்து வைத்து, தொடர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் சதீஷ். விசாரணையில் உண்மை அம்பலமான நிலையில். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்