ரத்தம் சொட்ட சொட்ட மோதிக்கொண்ட அதிமுக - அமமுக பிரமுகர்கள்... சென்னை திருப்போரூரில் பரபரப்பு
திருப்போரூர் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சிவராமன். அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவரான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள பள்ளத்தில் மண் நிரப்பியுள்ளார். அதன், அருகில் அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்தியின் மனைவிக்கு சொந்தமான காலிமனை இருந்ததால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, தாண்டவமூர்த்தி அடியாட்களுடன் சிவராமனை தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சிவராமன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாண்டவமூர்த்தியும் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 2 கார்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.