ஏரியில் மண் எடுக்க வந்தவர்களை விரட்டி அடித்த மக்கள் - செங்கல்பட்டு அருகே பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே, ஏரியில் மண் எடுக்க வந்த ஒப்பந்ததாரர்களை பொது மக்கள் விரட்டியடித்தனர். ஆலத்தூரில் உள்ள பெரிய ஏரியில், ஆட்சியர் உத்தரவின் பேரில் சாலைப் பணிக்கு மண் எடுக்கப்பதற்காக, லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களுடன் ஒப்பந்ததாரர்கள் வந்துள்ளனர். ஆனால், ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து வாகனங்களுடன் வெளியேற்றினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 3 அடி மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு, ஏரியில் 20 அடி ஆழம் வரை மண் எடுப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதனால், குடிநீர் உள்ளிட்ட தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்...