"100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம் வரும்" - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்
#Vellore | #electioncampaign
"100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம் வரும்" - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கழனிபாக்கம் மற்றும் கந்தனேரி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... பிரச்சாரத்தில் உரையாற்றிய கதிர் ஆனந்த், 100 நாள் வேலை திட்டத்தை பாஜகவும் அதிமுகவும் இணைந்து முழுமையாக நிறுத்தி விடுவார்கள் என்றும், உதய சூரியனுக்கு வாக்களித்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி 400 ரூபாய் ஊதியமாக வழங்குவோம் என உறுதி அளித்தார்... மேலும் பாஜக மற்றும் அதிமுகவுக்கு வாக்களித்தால் 100 நாள் வேலைத்திட்டமே இல்லாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டார். முன்னதாக கதிர் ஆனந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.