சென்னையில் தனியாக சென்ற பெண்.. பின் தொடர்ந்து வந்த வெள்ளை நிற ஷூ - நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி
சென்னையில், பெண்ணிடம் செயினை பறித்து சென்ற கல்லூரி மாணவரை வெள்ளை நிற ஷூ-வை வைத்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த ஆதி நகரை சேர்ந்த சாந்தி, கூலி வேலை செய்யும் தனது சகோதரருக்கு உணவு எடுத்து சென்று கொண்டிருந்தார். பம்மல் அருகே நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், கொள்ளையர் தப்பி சென்ற பம்மல் முதல் புரசைவாக்கம் வரையிலான 186 சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். முடிவில், கொள்ளையர் அணிந்திருந்த வெள்ளை நிற ஷூ-வை வைத்து வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது அலி மற்றும் ஒரு கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.