`தீப ஒளி திருநாள்' - காஞ்சி காமாட்சி அம்மன்ராஜ வீதிகளில் வீதி உலா

Update: 2024-10-31 11:18 GMT

தீபாவளி திருநாளை முன்னிட்டு, காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

பின்னர் மேளதாள வாத்தியங்கள் முழங்க, லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில், கோபுர வாசலுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் வந்த போது 50 ஆயிரம் சரவெடி பட்டாசுகள் அரை மணி நேரம் வெடிக்கப்பட்டன. பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு காஞ்சிபுரம் 4 ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்