கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரம் கிராமத்தில் உள்ள பஜனை மட தெருவில் ஒரே நேரத்தில் ஒரே தெருவில் உள்ள 10 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலா 10,000 வாலா சரவெடியை வாங்கி, அதனை நீளமாக இணைத்து வெடிக்கச் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று இது போல் வெடி வெடித்து அமர்க்களப்படுத்துவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஏறத்தாழ ஐந்து நிமிடங்கள் பத்து வினாடிகள் வெடித்து சிதறிய பட்டாசுகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.