தீபாவளியில் நடந்த அதிர்ச்சி - 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. அமைச்சர் சொன்ன தகவல்
தமிழ்நாட்டில் தீபாவளி தீக்காயங்களினால் 20 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்... சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீக்காயங்களினால் பாதிப்படைந்தவர்கள் 15 சதவீதத்திற்கும் குறைவான பாதிப்போடு சிகிச்சை பெற்று வருவதாகவும், பட்டாசு வெடிப்புகளால் கடந்த 3 ஆண்டுகளாக உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக உள்ளது என்றும் தெரிவித்தார்... மேலும், மற்ற நாள்களில் 108க்கு 12 ஆயிரம் அழைப்புகள் வரும் நிலையில் தீபாவளி என்றால் 20 ஆயிரம் அழைப்புகள் வருவதாகக் குறிப்பிட்டார்.