"விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்".. அறப்போர், பி.யு.சி.எல். அமைப்புகள் கோரிக்கை

Update: 2023-11-23 02:25 GMT

செய்யாறு விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும், அருள் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம், பி.யு.சி.எல். உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை அவர்கள், காந்திய வழியில் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த‌து எந்த வகையில் குற்றமாகும்? என்று கேள்வி எழுப்பினர். சிப்காட்டுக்காக மற்ற இடங்களில் எவ்வளவு இடங்கள் கையகப்படுத்தப்பட்டன?, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?மேல்மாவில் சிப்காட் திட்டம் ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்