தன்பால் திருமணம் அங்கீகரிக்கக் கோரிய வழக்கு - இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

Update: 2023-10-17 04:18 GMT

தன்பால் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.

தன்பால் திருமணத்துக்கு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. கடந்த மே 11-ஆம் தேதி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வைத்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இன்று சந்திரசூட் தலைமையிலான

அரசியல்சாசன அமர்வு தீர்ப்பளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்