சேலம் மாவட்டத்தில், கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரி கடைகாரரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளம்பிள்ளை அருகே தனியார் பேக்கரி ஒன்று, கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்துள்ளது. இதனை, 2 வயது குழந்தை ஒன்று சாப்பிட்டும் உள்ளது. குழந்தை சாப்பிட்ட பின், கேக்கில் கெட்டுப்போன வாசனை வருவதை உணர்ந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், பேக்கரி கடைகாரரிடம் குழந்தையின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.