முதல் முறையாக CAA மூலம்... பாக்., ஆப்கன்-ல் இருந்து வந்த 14 பேருக்கு குடியுரிமை..!
மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி நடைமுறைப்படுத்தியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் பாரசீகர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களில், முதற்கட்டமாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது. அவர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, குடியுரிமைச் சான்றிதழை வழங்கினார்.