கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேருந்து நிலையத்தில், நள்ளிரவு வரை வழக்கம் போல் அரசுப்பேருந்து இயங்கியது. ஒசூர் பேருந்து நிலையம் வழியாக பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து ஒசூருக்கும் வரும் பேருந்துகளின் எண்ணிக்கை வழக்கம் போல் இருந்தது. இருப்பினும், பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்படுகிறது. இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இதே நிலை நீடிக்குமா? என அச்சம் எழுந்துள்ளது.