மதுரை தென்கால் கண்மாய் பகுதியில் 200 கோடி ரூபாய் செலவிலும், வண்டியூர் கண்மாய் பகுதியில்150.28 கோடி ரூபாய் செலவிலும் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களால் 2 கண்மாய்களும் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக கூறி, மணிபாரதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். இதனால் இந்த வழக்கை மூன்றாவது தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி தண்டபாணி, மேம்பால பணிகளுக்கு அனுமதி கொடுக்க இயலாது கூறியதுடன், வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரைத்து உத்தரவிட்டார்.