வெளுக்கும் கன மழை.. மிதக்கும் வீடுகள் - தத்தளிக்கும் குமரி மாவட்டம்

Update: 2023-10-03 14:06 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி கழில் அன்றாட பணிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அவ்வப்போது கனமழையும் சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருவதால் நிறுத்தலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதோடு நேர்ந்தனைகளில் இருந்து வெள்ளம் வெளியேறி ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே பிள்ளை தோப்பு பகுதியில் சுமார் 130 வீடுகளைக் கொண்ட வின்சென்ட் நகரில் நேற்று முதல் குடியிருப்புகளுக்கு இடையே தேங்கிய மழை நீர் இன்னும் தொடரும் மழையால் வடிந்து செல்லாத அவல நிலை உள்ளது ஏற்கனவே வீட்டுக்குள் புகுந்த மழை நீரை அகற்றும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து மழை நீரை வெளியேற்ற முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர் மட்டுமின்றி மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் சமையல் கூட செய்ய முடியாமல் குழந்தைகளையும் முதியவர்களையும் பாதுகாக்க பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் இப்பகுதியில் பாய்கின்ற ஓடையில் இருந்து வெளியேறிய மழை நீரை அங்கிருந்து அகற்றுவதற்கு அதிகாரிகள் பெரிதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த பகுதியில், ஒருபுறம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் தாயின் போது மழை நீர் வீடுகளைச் சூழ்ந்து மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதும் மறுபுறம் கடல் சீற்றம் ஏற்படும் போது கடல் நீர் வீடுகளை சுமந்து மக்களை பரிகவிக்க வைப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்