இரு சக்கர வாகனமும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வைரவன்பட்டி - திண்டுக்கல் சாலையில் இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது. பால் கேனுடன் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், அரசு பேருந்து ஓட்டுநர் ராம்பிரசாத் மற்றும் நடத்துநர் இளையராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...