கடல் போல் மாறிய பவானி.. சீறிப்பாயும் தண்ணீர்... கலெக்டர் கொடுத்த கடைசி வார்னிங் | Bhavani River

Update: 2024-07-29 05:39 GMT

ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுங்கரா ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 84 கிலோ மீட்டர் தொலைவிற்கு பவானி, அந்தியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய தாலுக்காவில் காவிரி ஆறு செல்கிறது. இந்நிலையில், பவானி தாலுகாவிற்குட்டபட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளப் பெருக்கின் போது, சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்