செங்கம் அடுத்த ஒடஞ்சமடை பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனையடுத்து தொடர் கோரிக்கையின் பயனாக, புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தார் சாலை அமைத்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், கையில் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.