சென்னை அருகே பேரதிர்ச்சி.. பெண்களிடம் எல்லை மீறிய காவலர்கள்.. "எல்லா டிரஸ்ஸயும் அவுத்து காட்ட சொல்றாங்க".. "தேவை இல்லாம பேசாதீங்க"

Update: 2024-08-22 08:55 GMT

சென்னை ஆவடி அருகே தங்கள் குடியிருப்பு அருகே சுற்றுச் சுவர் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தங்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து செய்ததாக நரிக்குறவர் இன பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள ஜெயா நகர் நரிக்குறவர் காலனியில் நீண்ட காலமாக 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த குடியிருப்புக்கு அருகே ராஜேஸ்வரி என்பவர் சுற்றுச் சுவர் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதை அறிந்து முன்கூட்டியே அங்கு சென்ற போலீசார், நரிக்குறவர் இன மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, போலீசார் தங்களை அடித்து வாகனத்தில் ஏற்றியதாகவும், திருமண மண்டபத்தில் வைத்து தாக்கி, வழக்கு போடுவதாக மிரட்டியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்