கரூரில் IT அதிகாரிகளை தாக்கிய விவகாரம்.. ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி
கரூரில் கடந்த மே 26 ஆம் தேதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர். அப்போது, அதிகாரிகளை நிறுத்தி, தாக்கி, கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் திமுகவை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த 5 நாட்களில் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதால், வருமானவரித்துறையினர் உயர்நீதிமன்றத்தை நாடியதால், ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, திமுகவினர் 15 பேர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். அதே நேரத்தில், அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு கடந்த கடந்த ஒன்றாம் தேதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.