தமிழ் நாட்டுக்குள்ளேயே `ஆடு ஜீவிதம்’ வாழ்க்கை - ஒரு கையெழுத்தால் மாறிய இளைஞர் தலைவிதி?
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு வேலை கொடுத்த நபர், தன்னை கொத்தடிமையை போன்று நடத்தியதாக புகாரளித்துள்ளார். உவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சித்திரை வேலு என்பவரிடம் ஆடு மேய்க்கும் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது, 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சங்கரிடம் கொடுத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சித்திரை வேலு, சங்கரை கொத்தடிமை போல் நடத்தியுள்ளார். அங்கிருந்து தப்பி வந்த சங்கர், சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளார்.