பள்ளி தாளாளருக்கு தொடர்பு? - விசாரணையில் அடுத்தடுத்து வெளியான பகீர் தகவல்

Update: 2024-08-07 13:17 GMT

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இளைஞருக்கும் கடிதத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. மேலும், தன் பெயரில் ஏற்கனவே ஒரு மிரட்டல் கடிதம் காவல்துறைக்கு அனுப்ப பட்டிருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனையடுத்து இளைஞரின் பின்னணியை விசாரித்த போலீசார், அவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநர் என்பதை கண்டுபிடித்தனர். இதனிடையே, அந்த பள்ளியின் தாளாளர் அருண் ராஜ், ஏற்கனவே மிரட்டல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்று வந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. அருண்ராஜ், தான் தாளாராக இருக்கும் பள்ளியின் அங்கீகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான ரோஸ் நிர்மலாவை அனுகியதாகவும், இதில் அருண்ராஜின் விண்ணப்பத்தை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் நிர்மலா குறித்து அருண்ராஜ் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டியதாகவும், பின் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் இளைஞர் சதிஷ் சாட்சி சொல்லக்கூடும் என்பதால் அவரை பழிவாங்க அருண்ராஜ் இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்