நெருங்கும் பொங்கல்... அனல் பறக்கும் கரும்புகள் ஏற்றுமதி

Update: 2024-01-11 05:19 GMT

நாமக்கல் மாவட்டம் சமயசங்கிலி கிராமத்தில் பொங்கல் கரும்புகள் ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சமயசங்கிலி கிராமத்தில் முகாமிட்டு கரும்புகளை கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும், விற்பனைக்காக வாங்கிச் செல்லும் வியாபாரிகளும் சமயசங்கிலி கிராமத்திற்கு படையெடுத்துள்ளனர். கரும்புகளை வெட்டி கட்டு கட்டி லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்