"வீட்டை காலி செய்யும்படி அறநிலையத்துறை மிரட்டல்" - கிராம மக்கள் மறியல் போராட்டம் | Anthiyur

Update: 2024-10-28 12:06 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வீட்டை காலி செய்யும்படி அறநிலையத்துறை மிரட்டுவதாக கூறி, கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூரியம்பாளையம் பெருமாள் மலைப் பகுதியில் சுமார்,

500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள்‌. இந்த இடமானது ரங்கம்மாள் என்ற தனி நபரின் பெயரில் இருந்துள்ளது‌. அதை தற்போது இந்து அறநிலையத்துறையினர்,பெருமாள்மலை கோவிலுக்குச் சொந்தமானது என்று அளவீடு செய்து வீட்டை காலி செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்